முகப்பு
பெரம்பலூர்

சின்ன வெங்காயம் நடவுப் பணியில் வேளாண் கல்லூரி மாணவிகள்

ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளம் கிராமத்தில் இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் சின்ன வெங்காயம் நடவுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.   

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளம் கிராமத்தில் இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் சின்ன வெங்காயம் நடவுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.   
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளம் கிராமத்தில் இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவவிகளுக்கான கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்ட முகாம் கடந்த செப். 25 ஆம் தேதி தொடங்கியது. டிச. 13 ஆம் தேதி வரை நடைபெறும் இப்பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ள மாணவிகள் விவசாயிகளை நேரடியாக சந்தித்து, அவர்களது வேளாண்மை முறைகள், வேளாண்மை நுணுக்கங்களை தெரிந்துகொண்டு, தங்களுக்கு தெரிந்த விவசாய முறைகளை விவசாயிகளுக்கு விளக்கி கூறுகின்றனர். மேலும், விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை தெரிந்துகொண்டு, அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை அளித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, செட்டிக்குளம் கிராம விவசாயிகளுக்கு பஞ்சகாவ்யா, சதகாவ்யா, மண்புழு உரம் தயாரித்தல், ஒருமித்த விதை நேர்த்தி குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, வேளாண் கல்லூரி மாணவிகள் ரெங்கநாயகி, எஸ். லட்சுமி, பி. சினேகா, கே. ராஜபிரியா, பி. குயின் பெர்ட்டில்லா, ஜே.யமுனா, எம். பூவிழிச்செல்வி, எஸ். பொன்மலர், பி. மெளனிகா, எம். கெளசல்யா உள்ளிட்டோர் விவசாயிகளின் வயலில் சின்ன வெங்காயம் நடவுப் பணியில் செவ்வாய்க்கிழமை முதல் ஈடுபட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →