பெரம்பலூர்

கேரள மக்களுக்கு நிவாரண உதவிகள்

DIN

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு, பாடாலூர் அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் வெள்ள நிவாரண உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
கேரளத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக, பாடாலூர் அனைத்து வணிகர் சங்கம் மற்றும் அரிமா சங்கம் சார்பில் முதல்கட்டமாக ரூ. 1 லட்சம் மதிப்பிலான 100 மூட்டை அரிசி, 5 மூட்டை பருப்பு ஆகியவை பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சவுமியா சுந்தரியிடம் ஒப்படைக்கப்பட்டது. 
நிகழ்ச்சியின்போது, வணிகர் சங்கங்களின் பேரவை மாநில துணைத் தலைவர் சண்முகநாதன், மாவட்டத் தலைவர் சாமி. இளங்கோவன், பாடாலூர் வணிகர் சங்கத் தலைவர் ஆனந்தன், செயலர் குணசந்திரன், பொறுப்பாளர்கள் ராஜகோபால், ராஜ்குமார், சங்கர், பாஸ்கர், வேணுகோபால், ராஜா உள்பட பலர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT