முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் பாரம்பரிய விதை திருவிழா

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை உழவர்கள் குழுவினர் இணைந்து நடத்திய பாரம்பரிய விதை திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

Updated On : 9 ஜூலை, 2018 at 8:22 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை உழவர்கள் குழுவினர் இணைந்து நடத்திய பாரம்பரிய விதை திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
பெரம்பலூர் மாவட்ட இயற்கை உழவர்கள் குழுவினர் சார்பில் 3 ஆம் ஆண்டு பாரம்பரிய விதைத் திருவிழா பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள பழைய எல்.ஐ.சி அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. எளம்பலூர் இளைஞர்களின் பறையாட்டம், சில்லக்குடி பள்ளி மாணவர்களின் சிலம்பாட்டம், தப்பாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகளுடன் விதை திருவிழா தொடங்கியது.  விழாவில், பாரம்பரிய நெல் ரகங்கள், நாட்டுக் காய்கறி விதைகள், கீரைகள் அவற்றின் விதைகள், மூலிகைகள், சிறுதானிய பயிர்கள், இயற்கை உணவுப் பொருள்கள், இயற்கை விவசாயம் தொடர்பான புத்தகங்கள், பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் ஆகியவை காட்சிப் படுத்தப்பட்டன.  
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை உழவர்கள் பழ. ஆறுமுகம், இளையராஜா, சதீஷ், அருண்குமார், மணி, அசோக் குமார், ராஜேந்திரன் அருள் ஜோதி, நல்லப்பன், செல்வக்குமார், மருதராசன், ஜெகன் ஆகியோர் இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்துப் பேசினர்.   
அரங்கில் வழங்கப்பட்ட சிறுதானிய உணவு வகைகள், தினை பாயாசம், பூங்கார் பாயாசம், குதிரை வாலி சாம்பார் சாதம், கிச்சிலி சம்பா தயிர் சாதம், இலுப்பை பூ சம்பா பொங்கல் ஆகிய உணவுப் பொருள்களை பொதுமக்கள் உண்டனர்.  
கருத்தரங்கில், நீர் மேலாண்மை குறித்து நிபுணர் பிரிட்டோ ராஜ், மானாவாரி நிலங்களில் பண்ணைக் குட்டை அமைத்து நீர் மேலாண்மை, லாபகரமாக கால்நடை வளர்க்கும் முறை குறித்து மருத்துவர் முத்துக்குமார் பேசினர். இயற்கை மருத்துவர் விஜய் கார்த்திக் உடலே மருந்து, நபார்டு வங்கி மேலாளர் நவீன் குமார் நிதியுதவி ஆகிய தலைப்புகளில் பேசினர். நிதி ஆலோசகர் வில்பர்ட் எடிசன், மருத்துவர் நேரு, பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர். இயற்தை விவசாயி ஆ. கார்த்திகேயன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.