முகப்பு
பெரம்பலூர்

அரியலூரில் தேமுதிகவினர் ஆலோசனை

அரியலூரில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் அண்மையில்(மே 12) நடைபெற்றது.

Updated On : 15 மே, 2018 at 4:16 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

அரியலூரில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் அண்மையில்(மே 12) நடைபெற்றது.
கூட்டத்தில், அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், புதிய பேருந்து நிலையம், அமைத்து தர வேண்டும். திருமானூர், தா.பழுர் ஒன்றியத்தை தனி வருவாய் வட்டமாக அறிவிக்க வேண்டும். மாவட்டத்தில் மணல் திருட்டு, மணல் கொள்ளைக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அரியலூர் நகர் முழுவதும் ஷேர் ஆட்டோ இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் ராம.ஜெயவேல் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜோசப் சத்தியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் கவியரசன், மாவட்ட துணைச் செயலாளர்கள் எழிலரசன், தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.