பெரம்பலூர்

தேர்தல் விதிமீறல்: அதிமுகவினர் மீது 4 வழக்குகள் பதிவு

தேர்தல் விதிமுறைகளை மீறி போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக

DIN

தேர்தல் விதிமுறைகளை மீறி போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக அதிமுகவினர் மீது பெரம்பலூர் போலீஸார் 4 வழக்குகள் பதிந்துள்ளனர்.
பெரம்பலூர் மேற்கு வானொலி திடலில், பெரம்பலூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் என்.ஆர். சிவபதியை ஆதரித்து, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். 
அப்போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறி ஏராளமான கொடிகள், விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தன. 
மேலும், போக்குவரத்துக்கு இடையூறாகவும், அனுமதி பெறாமலும் ஏராளமான கட்சி பதாகைகள் நகரம் முழுவதும் வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, பெரம்பலூர் போலீஸார் அதிமுகவினர் மீது 4 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். 
அதிமுக நகரச் செயலர் ஆர். ராஜபூபதி மீது ஒரு வழக்கும், வேட்பாளர் என்.ஆர். சிவபதி மீது 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின் சிக்கனம்: விழிப்புணா்வுப் பேரணி

அரியலூரில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் நாளை தொடக்கம்

மத்திய அரசை கண்டித்து சட்ட நகல் எரிப்பு போராட்டம்

கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவு

SCROLL FOR NEXT