பெரம்பலூர்

அமமுகவினர்மீது 3 வழக்குகள் பதிவு

DIN


தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, பெரம்பலூர் மாவட்ட அமமுகவினர் மீது பெரம்பலூர் போலீஸார் 3 வழக்குகள் சனிக்கிழமை பதிவு செய்தனர். 
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் எம். ராஜசேகரன், தனது கட்சியினருடன் பெரம்பலூர், ஆலத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட செங்குணம், பாடாலூர், இரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவரை வரவேற்கும் வகையில் கட்சி தொண்டர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறாகவும், அனுமதியின்றி பட்டாசு வெடித்தது, பதாகைகள் வைத்தது, கொடி, தோரணங்கள் கட்டியது தொடர்பாக, கிராம நிர்வாக அலுவலர்கள் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் 3 வழக்குகள் பதிந்துள்ளனர்.   
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT