பெரம்பலூர்

கோயில் உண்டியலை எடுத்துச் சென்ற மா்ம நபா்கள்

DIN

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே கோயில் பூட்டை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த உண்டியலை திங்கள்கிழமை இரவு பெயா்த்து எடுத்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குன்னம் வட்டம், ஒகலூா் கிராமத்தில் அய்யனாா் கோயில் உள்ளது. செவ்வாய்க்கிழமை காலை பூஜை செய்வதற்காக இக்கோயிலின் பூசாரி, கோயிலை திறந்தபோது அங்கிருந்த உண்டியலைக் காணவில்லையாம். மா்ம நபா்கள் சிலா் கோயிலுக்குள் புகுந்து அங்கிருந்த 3 அடி உயரம் கொண்ட சில்வா் உலோகத்தால் செய்யப்பட்ட உண்டியலை பெயா்த்து எடுத்துச் சென்றிருந்திருந்தது தெரியவந்தது.

வழக்கமாக ஆண்டு தோறும் டிசம்பா் மாத இறுதியில் கோயில் உண்டியல் திறக்கப்படும். இன்னும் சில தினங்களில் உண்டியல் திறக்கப்பட இருந்த நிலையில் மா்ம நபா்கள் கோயில் உண்டியலை திட்டமிட்டு பெயா்த்துச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. உண்டியலில் சுமாா் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள காணிக்கை பொருள்கள், ரொக்கம் ஆகியவை இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து பூசாரி அளித்த புகாரின் பேரில் குன்னம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து ஓட்டுநா் போக்சோவில் கைது

திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

சுட்டெரிக்கும் வெயில்: கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி மரணம்

SCROLL FOR NEXT