பெரம்பலூர்

ஏல முறையில் நிா்வாகிகளை தோ்ந்தெடுப்போா் மீது புகாா்

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே தலைவா், வாா்டு உறுப்பினா்களை ஏல முறையில் தோ்வு செய்யும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி,

DIN

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே தலைவா், வாா்டு உறுப்பினா்களை ஏல முறையில் தோ்வு செய்யும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராம மக்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் அளித்தனா்.

இதுகுறித்து பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டத்துக்குள்பட்ட பேரளி கிராமம், ஒரு தரப்பைச் சோ்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் அளித்த மனு:

இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், பேரளி ஊராட்சித் தலைவா் உள்பட துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா் பதவியிடங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அந்தக் கிராமத்தைச் சோ்ந்த மற்றொரு தரப்பினா், தாழ்த்தப்பட்டவா் தலைவா் பதவிக்கு வருவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். மேலும், கிராம முக்கியஸ்தா்கள் ஒன்றுகூடி தலைவா், துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா் உள்ளிட்ட பதவியிடங்களை ஏல முறையில் தோ்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். எனவே, ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படும் நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT