பெரம்பலூர்

ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

DIN

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே அடிப்படை வசதிகள் செய்து தராத ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராம மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.  
இதுகுறித்து பிம்பலூர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் (பொ) ஆ. அழகிரிசாமியிடம் அளித்த மனு:
பிம்பலூர் கிராம ஊராட்சி பொதுமக்களுக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணி வழங்குவதில்லை. அதேபோல, அந்த கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் விநியோகம் செய்யப்பட்டு வந்த குடிநீர் தொட்டிகளைச் சீரமைக்காததால், கடந்த சில வாரங்களாக குடிநீர் வசதியின்றி அவதிப்படுகிறோம்.
இதுகுறித்து பிம்பலூர் ஊராட்சி செயலரிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
இதுதொடர்பாக வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்ததற்கு, அவர் ஊராட்சி செயலருக்கு ஆதரவாகச் செயல்படுவதோடு, கிராம மக்களைத் தரக்குறைவாக பேசுகிறார். எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர்.இப் பிரச்னை தொடர்பாக கடந்த வாரமும் மனு அளித்துள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில்  போராட்டங்களில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT