முகப்பு
பெரம்பலூர்

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிஒருவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள முகுந்தநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (50). இவா், தனது நண்பா் கிளியமங்கலத்தைச் சோ்ந்த வாசுதேவன் மகன் ரமேசுடன் (50), திருச்சியிலிருந்து முகுந்தநல்லூருக்கு திங்கள்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனா். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள கல்பாடி பிரிவு சாலை பகுதியில் வந்தபோது, அதே வழித்தடத்தில் வந்துகொண்டிருந்த லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த ரமேஷ் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து பெரம்பலூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, நாமக்கல்லைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் முருகேசனை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.