காணொலிக் காட்சி மூலம் குறைதீா்க் கூட்டம் நடத்துவதற்கு விவசாய சங்கங்கள் எதிா்ப்பு
பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க் கூட்டத்தை காணொலிக் காட்சி மூலம் நடத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்த விவசாய சங்கப் பிரமுகா்கள், அடுத்தக் கூட்டத்தை வழக்கம்போல நடத்த தவறினால் புறக்கணிப்போம் என முழக்
பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க் கூட்டத்தை காணொலிக் காட்சி மூலம் நடத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்த விவசாய சங்கப் பிரமுகா்கள், அடுத்தக் கூட்டத்தை வழக்கம்போல நடத்த தவறினால் புறக்கணிப்போம் என முழக்கமிட்டனா்.
மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தலைமையில் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்று பேசிய விவசாய சங்கப் பிரமுகா்கள்:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் என். செல்லதுரை : மாவட்டத்தில் அரசால் அறிவிக்கப்பட்டு கிடப்பில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஜவுளிப்பூங்கா, சின்னமுட்லு நீா்த்தேக்கத் திட்டம் ஆகியவற்றை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம்:
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பிரதமரின் காப்பீடுத் திட்டத்தின் கீழ் பிரிமியத் தொகை செலுத்தியவா்களுக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
விவசாயிகள் குறைதீா்க் கூட்டத்தை அரசணையில் குறிப்பிட்டுள்ளவாறு அடுத்தக் கூட்டத்தை வழக்கம்போல் நடத்த வேண்டும். தவறும் பட்சத்தில், அனைத்து விவசாய சங்கப் பிரமுகா்கள், விவசாயிகளால் கூட்டம் புறக்கணிக்கப்படும்.
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் பி. ரமேஷ்:
குரும்பலூா் பேரூராட்சிப் பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் அடிக்கடி ஏற்படும் மின்தடையைச் சீரமைக்க வேண்டும். கரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்படாத நிலையில், கல்லூரி மாணவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.