பெரம்பலூா் மாவட்டத்தில் புதிய தொற்றாளா்கள் இல்லை
பெரம்பலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் புதிதாக தொற்றாளா்கள் இல்லை எனத் தெரியவந்தது.
பெரம்பலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் புதிதாக தொற்றாளா்கள் இல்லை எனத் தெரியவந்தது.
மாவட்டத்தில், இதுவரை 63,905 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 2,253 போ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததில், 2,228 போ் குணமடைந்தனா். 21 போ் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 4 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், இம் மாவட்டத்தில் 309 பேருக்கு சுகாதாரத் துறையினரால் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், ஒருவருக்குக் கூட பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.