ரூ.11 ஆயிரத்திற்கு சாம்சங்கில் புதிய ஸ்மார்ட்போன்! கேலக்ஸி எம் 17இ!
சாம்சங் கேலக்ஸி எம் 17இ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் இன்று (மார்ச் 17) அறிமுகமானது குறித்து...
சாம்சங் கேலக்ஸி எம் 17இ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் இன்று (மார்ச் 17) அறிமுகமானது.
பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட எம் வரிசையில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.
இரட்டை முதன்மை கேமராக்களுடன் 6,000mAh பேட்டரி திறனுடன் சாம்சங் கேலக்ஸி எம் 17இ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்துப் பார்க்கலாம்.
Advertisement
Advertisement
4GB உள்நினைவகம் + 128G நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 12,999.
6GB உள்நினைவகம் + 128G நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 14,499.
எனினும் வாடிக்கையாளர்கள் ரூ. 1,250 வரை சலுகை பெற முடியும். இதன்மூலம் ரூ. 11,749க்கு இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எம் 17இ சிறப்பம்சங்கள்
6.58 அங்குல எல்சிடி திரை கொண்டது.
திரை சுமூகமாக இயங்கும் வகையில் 120Hz திரன் உடையது.
மீடியாடெக் டைமன்சிட்டி 6300 புராசஸர் கொண்டது.
2TB வரை நினைவகத்தை விரிவாக்கம் செய்துகொள்ளலாம்.
பின்பக்கம் இரண்டு கேமராக்கள் உள்ளன. 50MP முதன்மை கேமராவுடன் 2MP டெப்த் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. செல்ஃபி பிரியர்களுக்காக முன்பக்கம் 8MP கேமரா உள்ளது.
6,000mAh பேட்டரி திறன் உடையது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 25W திறன் வழங்கப்பட்டுள்ளது.
பக்கவாட்டில் விரல்ரேகைப் பதிவு சென்சார் உள்ளது.
தூசி மற்றும் நீர்ப்புகாத வகையில் IP54 திறன் உடையது.
ஊதா, நீலம் என இரு வகை வண்ணங்களில் கிடைக்கின்றன.
Samsung Galaxy M17e 5G debuts in India with 6,000mAh battery, 120Hz display: Price, specs
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.