தீபாவளிக்குப் பிறகு சாம்சங், ஷாவ்மி ஸ்மார்ட்போன்களின் விலை 19% உயர்வு!
சாம்சங், ஷாவ்மியில் 41 வகையான மாடல் ஸ்மார்ட்போன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது குறித்து...
தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சாம்சங், ஷாவ்மி ஸ்மார்ட்போன்களின் விலை 19% உயர்ந்துள்ளது.
இந்த இரு நிறுவனங்களிலும் சேர்த்து 41 வகையான மாடல்களின் விலை அதிகரித்துள்ளது. பண்டிகையையொட்டி எழுந்த தேவை அதிகரிப்பின் காரணமாக இந்த விலையேற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
Advertisement
Advertisement
திருத்தப்பட்ட விலையேற்றம் இன்று (நவ. 16) முதல் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸியில் ஏ மற்றும் எஃப் வரிசை மற்றும் ஷாவ்மியில் 19 வரிசை ஸ்மார்ட்போன்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளன.
இந்த ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 1000 முதல் ரூ. 4000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்களின் மாடல் மற்றும் நினைவகத் திறன் ஆகியவற்றைப் பொருத்து விலையேற்றம் மாறுபடுகிறது.
இதுதவிர ஓப்போ, விவோ, ரியல்மி ஆகிய நிறுவனங்களும் தங்கள் ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திடீர் விலையேற்றத்தால் ஆரம்ப நிலை மற்றும் மத்திய தர விலையிலுள்ள ஸ்மார்ட்போன்களை நடுத்தர மக்களால் வாங்க முடியாத நிலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
சாம்சங்கில் குறிப்பாக 3.13% முதல் 9.52% வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஷாவ்மியில் 4.26% முதல் 18.7% வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சாம்சங்கில் கேலக்ஸி ஏ07, கேலக்ஸி எஃப் 17, ஏ 17, ஏ 57, ஏ 36, ஏ 56, ஏ 37 ஆகிய ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 2000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.