கேலக்ஸி எஸ்26 விலை கிடுகிடு உயர்வு: 17% வரை அதிகரித்த சாம்சங்!
சாம்சங் தனது கேலக்ஸி எஸ்26 சீரிஸ் போன்களின் விலையை 17 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
புதுதில்லி: கொரிய மின்னணு நிறுவனமான சாம்சங் தனது முதன்மைத் தயாரிப்பான கேலக்ஸி எஸ்26 சீரிஸ் போன்களின் விலையை 17 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
கேலக்ஸி எஸ்26 சீரிஸில் உள்ள 256 ஜிபி சேமிப்புத் திறன் கொண்ட அடிப்படை மாடலின் விலை, அறிமுகத்தின் போது ரூ. 87,999 ஆக இருந்த நிலையில், தற்போது சுமார் 17 சதவீதம் அதிகரித்து ரூ. 1,02,999 ஆக உயர்ந்துள்ளது.
கேலக்ஸி எஸ்26 மாடல் போன் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதன் முந்தைய மாடலான கேலக்ஸி - எஸ்25 சீரிஸை விட 8 முதல் 15 சதவீதம் அதிக விலையில் அறிமுகம் செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா மாடல் ரூ. 1,39,999 என்ற ஆரம்ப விலையிலும், கேலக்ஸி எஸ்26 (பிளஸ்) மாடல் ரூ. 1,19,999 ஆகவும், அடிப்படை மாடலான எஸ்26 சீரிஸ் ரூ. 87,999 க்கும் அறிமுகமானது.
சமீபத்திய விலை உயர்வால், எஸ்26 போன்களின் விலை, ஒரு லட்சம் ரூபாயை கடந்ததுள்து.
1 டிபி சேமிப்புத் திறன் கொண்ட உயர்தர மாடலான எஸ்26 அல்ட்ரா தற்போது ரூ. 2,14,999 க்கும், 512 ஜிபி சேமிப்புத் திறன் கொண்ட சாம்சங் எஸ்26 சீரிஸின் விலை 13.9 சதவீதம் அதிகரித்து ரூ. 1,22,999 ஆகவும், 256 ஜிபி கொண்ட எஸ்26 (பிளஸ்) மாடல் விலையை 12.5 சதவீதம் அதிகரித்து ரூ. 1,34,999 ஆகவும், 512 ஜிபி திறன் கொண்ட எஸ்26 (பிளஸ்) விலை 10.7 சதவீதம் அதிகரித்து ரூ. 1,54,999 ஆக உயர்த்தியுள்ளது.
256 ஜிபி சேமிப்புத் திறன் கொண்ட உயர்தர சாம்சங் எஸ்26 அல்ட்ரா மாடலின் விலை 10.7 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ. 1,54,999 ஆகவும், 512 ஜிபி சேமிப்புத் திறன் கொண்ட சாம்சங் எஸ்26 அல்ட்ரா-வின் விலை 9.4 சதவீதம் அதிகரித்து ரூ. 1,74,999 ஆக நிர்ணயம் செய்துள்ளது சாம்சங்.
இந்த ஆண்டு மெமரி சிப்கள், மதர்போர்டு மற்றும் பிற மின்னணு உதிரிபாகங்களின் விலை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று துறைசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Samsung has increased the price of its flagship Galaxy S26 series by up to 17 per cent.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.