FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் லாபம் 7% உயர்வு!

ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ், முதல் அரையாண்டில் அதன் லாபம் 7 சதவீதம் அதிகரித்து ரூ. 289 கோடியாக இருப்பதாக அறிவித்தது.

10 நவம்பர் 2026, 10:05 pm
Shriram General Insurance
பகிர்:

புதுதில்லி: ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ், செப்டம்பர் 2026 உடன் முடிவடைந்த முதல் அரையாண்டில் அதன் லாபம் 7 சதவீதம் அதிகரித்து ரூ. 289 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில், இந்நிறுவனம் ரூ. 269 கோடி லாபம் ஈட்டியிருந்தது.

Advertisement

Advertisement

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில், ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மொத்த நேரடி காப்பீட்டு பிரீமியம் வருவாய் ரூ.2,470 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த வருவாய் ரூ.2,045 கோடியாக இருந்தது.

வரும் காலங்களில், நிலையான மற்றும் லாபகரமான வளர்ச்சிப் பாதையைத் தக்க வைத்துக் கொண்டு, எங்களின் விநியோக வலையமைப்பை வலுப்படுத்துவோம் என்றார் ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அனில் அகர்வால்.

summary

Shriram General Insurance reported a 7 per cent growth in profit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.