சாம்சங் ஸ்மார்ட்போனைவிட வேகமாக சார்ஜ் ஆகும் மோட்டோரோலா! வித்தியாசங்கள் என்னென்ன?
சாம்சங் கேலக்ஸி ஏ37 ஸ்மார்ட்போனை விட மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் வேகமாக சார்ஜ் ஆகும் அம்சத்தைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ37 ஸ்மார்ட்போனை விட மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் வேகமாக சார்ஜ் ஆகும் அம்சத்தைக் கொண்டுள்ளது.
இருவேறு ஸ்மார்ட்போன்களும் வெவ்வேறு பயனர்களை குறிவைத்து சந்தையில் அறிமுகமானவை. இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து காணலாம்.
சாம்சங் கேலக்ஸி ஏ37 முற்றிலும் நேவிகேஷனுக்காகவும் அழைப்புகள் மற்றும் நீண்ட நேர விடியோ பார்வையாளர்களுக்காக சந்தைப்படுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
ஆனால், எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் குறைவான நேரம் உடைய பயனர்களுக்காகவும் வேகமாக சார்ஜ் ஆகும் வகையிலும் உருவாக்கப்பட்டது.
அறை அல்லது விடுதியில் ஒரு பிளக் பாயிண்ட் மட்டுமேகொண்டவர்களின் முக்கிய தேர்வாக வேகமாக சார்ஜ் ஆகும் ஸ்மார்ட்போன் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அவர்களைக் குறிவைத்து மோட்டோரோலா எட்ஜ் 70 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கேலக்ஸி ஏ37 ஸ்மார்ட்போனில் ஆன்டிராய்டுக்கு 6 அப்கிரேட் வழங்கப்பட்டுள்ளன. மார்ச் 2032 வரை பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
மோட்டோரோலாவில் ஆன்டிராய்டு அப்கிரேட் மற்றும் பாதுகாப்பு உத்திரவாதம் வெறும் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
ஒரே ஸ்மார்ட்போனை பல ஆண்டுகளுக்கு வைத்திருக்க நினைக்கும் பயனர்களுக்கு சாம்சங் சிறந்ததாகவே உள்ளது.
மோட்டோரோலாவில் 256 ஜிபி வழங்கப்பட்டுள்ளது. சாம்சங்கில் 128ஜிபி மற்றும் 256 ஜிபி என இரு வேரியண்ட்களில் வழங்கப்படுகின்றன.
நினைவக திறனுக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றபடி முக்கியமான வேறுபாடுகளை கண்டறிந்து தேவைக்கேற்ப ஸ்மார்ட்போன்களை பயனர்கள் தேர்வு செய்ய வேண்டும்.