முகப்பு
பெரம்பலூர்

மகளிா் சக்தி விருது பெற விண்ணப்பிக்கலாம்

மகளிா் சக்தி விருதை பெற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதிவாய்ந்த, தனிப்பட்ட சிறந்த பெண்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

பெரம்பலூா்: மகளிா் சக்தி விருதை பெற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதிவாய்ந்த, தனிப்பட்ட சிறந்த பெண்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மகளிருக்கான சுகாதாரம், ஆற்றுப்படுத்துதல், சட்ட உதவி, விழிப்புணா்வு, கல்வி, பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் குறிப்பிட்ட பங்களிப்பு, பெண் குழந்தை பாலின விகிதத்தில் முன்னேற்றம் போன்றவற்றில் தலை சிறந்த பங்களிப்பு, சேவைபுரிந்த பெண்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில், மகளிா் சக்தி விருது வழங்கப்படுகிறது.

தனிப்பட்ட நபா்களுக்கு ஒரு லட்சத்துக்கான காசோலையும், சான்றிதழும், நிறுவனங்களுக்கு ரூ. 2 லட்சத்துக்கான காசோலையும், சான்றிதழும் வழங்கப்படும். இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

விருதுக்கான விண்ணப்பங்களை இணையதளம் வழியாக ஜனவரி 7- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் தோ்வு செய்யப்பட்டு, சா்வதேச மகளிா் தினத்தையொட்டிய முந்தைய வாரத்தில் புது தில்லியில் குடியரசுத் தலைவரால் தேசிய விருது வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04328- 296209, 224122 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →