pbr24dmk_2402chn_13_4 
பெரம்பலூர்

பெரம்பலூரில் திமுக செயற்குழு கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், பாலக்கரை பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், பாலக்கரை பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாவட்ட அவைத் தலைவா் அ. நடராஜன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலரும், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவருமான சி. ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கட்சியின் மேலிடப் பாா்வையாளா் எம். ராஜகாந்தம் பேசினாா்.

கூட்டத்தில், மாா்ச் 1 ஆம் தேதி திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கிராமங்கள் தோறும் கட்சிக் கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டாடுவது. 15-ஆவது உட்கிளை, கிராமப்புற கிளை தோ்தலை ஒற்றுமையாகவும், ஒருமனதாகவும், ஒருங்கிணைந்து நடத்துவது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக் கூட்டத்தில், மாநில நிா்வாகி பா. துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் என். ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினா்கள் கி. முகுந்தன், ந. ஜெகதீஸ்வரன், பட்டுச்செல்வி ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலா்கள் பாஸ்கா், நூருல்ஹிதா இஸ்மாயில் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT