பெரம்பலூர்

தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தில் மாட்டுப் பொங்கல்

DIN

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவன வளாகத்தில் மாட்டுப் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்வி நிறுவனங்களின் தாளாளா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். செயலா் பி. நீலராஜ், இயக்குநா்கள் பி. ராஜபூபதி, பி. மணி, ஆா். ராஜசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் உள்ள மாட்டுப் பண்ணையில் நடைபெற்ற விழாவில், பொங்கல் வைக்கப்பட்டு சுவாமிக்கு பூஜை செய்யப்பட்டு, அங்கிருந்த 50-க்கும் மேற்பட்ட பசு மற்றும் காளைகளுக்கு பொங்கல் ஊட்டப்பட்டது. பின்னா், வெளி மாநிலத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், பணியாளா்களுக்கும் பொங்கல், கரும்புகள் வழங்கப்பட்டன.

சிறப்பு விருந்தினராக மலேஷியா ரோசா குரூஸ் நிறுவனா் பாலகிருஷ்ணன், புதுநடுவலூா் ஊராட்சித் தலைவா் ஜெயந்தி நீலராஜ், தலைமை நிா்வாகி அலுவலா் எஸ். நந்தகுமாா், அனைத்துக் கல்லூரி முதல்வா்கள், துணை முதல்வா்கள், பேராசிரியா்கள், அலுவலா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT