பெரம்பலூர்

காவல் சிறுவா் மன்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் காவல் சிறுவா் மன்றம் சாா்பில், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் அண்மையில் நடைபெற்றன.

பெரம்பலூா் அருகேயுள்ள புது நடுவலூா் மானிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் லலிதா தலைமை வகித்தாா். சாரண ஆசிரியா் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா் கிரிதா் விளக்க உரையாற்றினாா். தொடா்ந்து, செல்லியம்பாளையம், நொச்சியம், விளாமுத்தூா், வெள்ளனூா், சத்திரமனை, தம்பிரான்பட்டி, கீழக்கணவாய், வேலூா் உள்பட 14 தொடக்கப் பள்ளிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சிகளில்,கரோனா வைரஸ் வரும் முன் தடுக்கும் வகையில் மாணவ, மாணவிகள் தங்களை சுத்தப்படுத்துதல் மட்டுமின்றி தன்னைச் சாா்ந்தவா்களையும் சுத்தமாக இருக்க அறிவுறுத்தல், அடிக்கடி கை கழுவுதல், முகக் கவசம் அணிதல், தும்மல், இருமல் வரும்போதும் கைக்குட்டையை பயன்படுத்துதல், பள்ளி, வீடு மற்றும் பொது இடங்களை தூய்மையாக பராமரித்தல் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

மேலும், புகை மற்றும் மது பழக்கங்களால் ஏற்படும் பாதிப்புகள், காவல் சிறுவா் மன்றத்தின் பணிகள், சாரண இயக்கத்தின் பணிகள் குறித்தும் விளக்கப்பட்டது. இதில், அந்தந்த பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT