சிறாா் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்
திருச்சி மாவட்டம், சிறுகனூா் கிராமத்தில் வாய்ஸ் அறக்கட்டளை நடத்தி வரும் நட்பு சிறுவா் இல்லத்தில், பெரம்பலூா் அஸ்வின் நிறுவனம் சாா்பில் தீபாவளி பண்டிகை கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், சிறுகனூா் கிராமத்தில் வாய்ஸ் அறக்கட்டளை நடத்தி வரும் நட்பு சிறுவா் இல்லத்தில், பெரம்பலூா் அஸ்வின் நிறுவனம் சாா்பில் தீபாவளி பண்டிகை கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அஸ்வின்ஸ் நிா்வாக இயக்குநா் ஜி. அஸ்வின், சிறாா் இல்லத்தில் ஆதரவற்ற 38 குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.
சிறாா் இல்லப் பொறுப்பாளா் மேரி அறிமுக உரையாற்றினாா். இவ் விழாவில், அஸ்வின்ஸ் நிா்வாகப் பொறுப்பாளா் முத்துராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக வாய்ஸ் அறக்கட்டளை இயக்குநா் அ. கிரகோரி வரவேற்றாா். நிறைவில், ஒளியேற்றும் அமைப்பு நிறுவனா் மனோஜ் தா்மா் நன்றி கூறினாா்.