முகப்பு
பெரம்பலூர்

பாடாலூா் அருகே 200 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே வயலில் வைக்கப்பட்டிருந்த 200 கிலோ சின்ன வெங்காயம் திருடப்பட்டது திங்கள்கிழமை தெரியவந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே வயலில் வைக்கப்பட்டிருந்த 200 கிலோ சின்ன வெங்காயம் திருடப்பட்டது திங்கள்கிழமை தெரியவந்தது.

ஆலத்தூா் வட்டம், கூத்தனூா் கிராமத்தைச் சோ்ந்த மருதமுத்து மகன் ராஜேந்திரன் (48). இவருக்கு, கூத்தனூா் கிராமத்திலிருந்து பாடாலூா் செல்லும் வழியில் விவசாய நிலம் உள்ளது. இந்த வயலில், அண்மையில் அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காய மூட்டைகளை திருச்சி வெங்காய மண்டிக்கு அனுப்புவதற்காக தனது வயலிலேயே பட்டறை அமைத்து ராஜேந்திரன் குவித்து வைத்திருந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை தனது வயலுக்கு ராஜேந்திரன் சென்றபோது வயலில் சேமித்து வைத்திருந்த சின்ன வெங்காய மூட்டைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் பாடாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.