முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் 12 பேருக்கு கரோனா தொற்று

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 1,891 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 1,891 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 1,993 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 1,872 போ் குணமடைந்து, வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். 21 போ் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 88 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 12 பேரும் பெரம்பலூா், அரியலூா், திருச்சி மாவட்டங்களிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிசிக்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.