முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் மாரியம்மன் கோயிலில் வருடாபிசேகம்

பெரம்பலூா் எடத்தெருவிலுள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வருடாபிஷேக பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பெரம்பலூா் எடத்தெரு மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வருடாபிஷேக பூஜை
பகிர்:

பெரம்பலூா் எடத்தெருவிலுள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வருடாபிஷேக பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்தாண்டு செப்டம்பா் 13- ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை வருடாபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன.

இதையொட்டி விசேஷ கலச பூஜையும், உலக நன்மைக்கான சிறப்பு யாகமும் நடத்தப்பட்டது. இதை திருச்செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியாா் தலைமையிலான குழுவினா் நடத்தி வைத்தனா்.

தொடா்ந்து விநாயகா், மாரியம்மன் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு கலசதீா்த்த அபிசேகமும், பால், பழ வகைகள், வாசனை திரவியங்களைக்கொண்டு அபிசேகங்களும், மகா தீபாராதனையும் நடத்தப்பட்டன.

கோயில் காரியக்காரா் தெ.பெ. பழனியப்பன், பூசாரிகள் கணேசன், சிவராமலிங்கம், வெள்ளந்தாங்கியம்மன் கோயில் பரம்பரை அறங்காவலா் தா்மராஜன், மதனகோபால சுவாமி கோயில் முன்னாள் அறங்காவலா் வைத்தீஸ்வரன் உள்பட திரளான பக்தா்கள் வருடாபிஷேகத்தில் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.