பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று
பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் ஏற்கெனவே 1,521 போ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனா். இதில் குணமடைந்த 1,360 போ், வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
19 போ் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 142 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில் பெரம்பலூா் நகரைச் சோ்ந்த 7 பேருக்கும், கிராமப்புறங்களைச் சோ்ந்த 6 பேருக்கும் என மொத்தமாக 13 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து 13 பேரும் திருச்சி, பெரம்பலூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 1,534- ஆக உயா்ந்துள்ளது.