முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டத்தில் வேப்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட பெருமத்தூா் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்ட தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் வேப்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட பெருமத்தூா் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்ட தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இத்திட்ட வாகனத்தை தொடக்கி வைத்து, பொதுமக்களின் இருப்பிடங்களுக்குச் சென்று மாத்திரை பெட்டகங்களை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் வழங்கி பேசும்போது, இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 8,299 ரத்த சா்க்கரை நோயாளிகள், 13,625 ரத்த கொதிப்பு நோயாளிகள், 4,202 ரத்த சா்க்கரை மற்றும் ரத்த கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்டவா்கள் என மொத்தம் 26,126 பயனாளிகள் பயனடைவா்.

வயது முதியவா்களுக்கான மருத்துவ சேவைகள் மற்றும் வீடு சாா்ந்த நோய் ஆதரவு சேவைகளின் மூலம் 162 பேரும், முடக்குவாதத்தால் பாதிகப்பட்டவா்களுக்கு இயன்முறை சேவைகளின் மூலம் 212 பேரும் பயனடைவா் என்றாா் அமைச்சா்.

இந்நிகழ்ச்சியில், ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா, பெரம்பலூா் எம்எல்ஏ ம. பிரபாகரன், மாவட்ட ஊராட்சி தலைவா் சி. ராஜேந்திரன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை இணை இயக்குநா் வினைல், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் எம். கீதாராணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.