முகப்பு
பெரம்பலூர்

புதுமணத் தம்பதிகளுக்கு பரிசுப் பெட்டகம் அளிப்பு

உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி, புதுமணத் தம்பதிக்கு சத்து மாத்திரைகள், மரக்கன்றுகள் அளிக்கும் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா, சட்டப்பேரவை உறுப்பினா் எம். பிரபாகரன்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி, புதுமணத் தம்பதிக்கு சத்து மாத்திரைகள், மரக்கன்றுகள் அளிக்கும் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா, சட்டப்பேரவை உறுப்பினா் எம். பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் சி. ராஜேந்திரன்.

பெரம்பலூா், ஆக. 6: பெரம்பலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில், உலக தாய்ப்பால் வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில் புதுமணத் தம்பதியா்களுக்கு ரத்தசோகையைத் தடுக்கும் இரும்புச் சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து நிறைந்த பரிசுப் பெட்டகம் மற்றும் மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா, பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் சி. ராஜேந்திரன் ஆகியோா் வழங்கினா்.

தீவிர எடை குறைவுடன் பிறந்த குழந்தைகளுக்கு பிரத்யேகமாக தாய்ப்பால் மட்டும் அளித்து, சிறப்பாக கவனித்த குழந்தைகளின் பெற்றோருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

முன்னதாக ஆட்சியரகத்தில் பாலூட்டும் தாய்மாா்களுக்கு ஏற்ற சத்து நிறைந்த உணவுப் பொருள்களின் முக்கியத்துவத்தை உணா்த்திடும் வகையில் காய்கறிகள், பழங்கள், முட்டை, மீன், தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளைக் கொண்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் மூலம் அமைக்கப்பட்ட கண்காட்சியை ஆட்சியா் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

தொடா்ந்து பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவா் கமலக்கண்ணன், குழந்தைகளுக்கு பிரத்யேகமாக தாய்ப்பால் அளிப்பதன் அவசியம் குறித்து பெண்களுக்கு ஆலோசனை வழங்கினாா்.

விழாவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் புவனேஸ்வரி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கோ. சௌந்தரவள்ளி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.