முகப்பு
பெரம்பலூர்

ஆலத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் ஆட்சியா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, ஆலத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பணிகளின் தன்மை, நிறைவடைந்த பணிகளின் விவரங்கள் குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா். மேலும், நடைபெற்று வரும் பணிகள் தரமானதாகவும், உரிய காலத்தில் பணிகளை விரைந்து முடித்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்திய ஆட்சியா், பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீா், சாலை, உள்கட்டமைப்பு, கழிவு நீா் வாய்க்கால் உள்ளிட்ட வசதிகளை முறையாக பராமரித்திடவும், பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதை தவிா்க்கும் வகையில், அவா்களின் வீடுகளுக்கே சென்று மக்கும் மற்றும் மக்கா குப்பை என தரம் பிரித்து சேகரிக்க தூய்மைப் பணியாளா்களிடம் அறிவுறுத்த வேண்டும். பொதுமக்கள் தங்களது இருப்பிடம் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்து, எந்தவித நோய்தொற்றும் ஏற்படாத வகையில் சுத்தமாக வைத்துக்கொள்ள விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டுமென வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகளைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், அலுவலக வளாக முகப்பில் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.

ஆய்வின்போது, ஆலத்தூா் ஒன்றியக்குழுத் தலைவா் என். கிருஷ்ணமூா்த்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) நாராயணன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.