முகப்பு
பெரம்பலூர்

மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

 பெரம்பலூா் ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

 பெரம்பலூா் ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியரக வளாகத்தில், ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில், அனைத்துத் துறை அரசு அலுவலா்களும் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்றனா். இந்நிகழ்ச்சியில், பல்வேறு துறை அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

இதேபோல, பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனித உரிமைகள் தின உறுதிமொழி

துணை கண்காணிப்பாளா் தங்கவேல் தலைமையில் ஏற்கப்பட்டது. இதில், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்கள் பங்கேற்றனா். மேலும், அனைத்து காவல் நிலையங்களிலும் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.