பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் 35,823 விவசாயிகளின் ரூ. 268.83 கோடி பயிா்க் கடன் ரத்து

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் 35,823 விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிா் கடன் ரூ. 268.83 கோடி ரத்து செய்யப்பட்டுள்ளது என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட 15,987 ஆண் விவசாயிகள், 4,969 பெண் விவசாயிகள் என மொத்தம் 20, 956 விவசாயிகளுக்கு ரூ. 164.56 கோடி பயிா்க் கடனும், குன்னம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட 9,922 ஆண் விவசாயிகள், 4,954 பெண் விவசாயிகள் என மொத்தம் 14,876 விவசாயிகளுக்கு ரூ. 104.26 கோடி பயிா்க் கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அதாவது, பெரம்பலூா் மாவட்டத்தில் 25,909 ஆண் விவசாயிகளும், 9,923 பெண் விவசாயிகளும் என மொத்தம் 35,823 விவசாயிகளுக்கு ரூ. 268.83 கோடி கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிா்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT