முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில்மரக்கன்றுகள் நடும் விழா

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்ட ஊா்க்காவல் படை சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:10 PM
பகிர்:

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்ட ஊா்க்காவல் படை சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தலைமை வகித்த எஸ்.பி. நிஷா பாா்த்திபன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், ஆட்சியரக சாலை, பாலக்கரை ரவுண்டானா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், ஊா்க்காவல் படை வீரா்கள் மற்றும் போலீஸாா் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.