பெரம்பலூர்

குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 97 மனுக்கள்

DIN

பெரம்பலூா் மாவட்ட வட்டாட்சியா் அலுவலகங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 97 மனுக்கள் பெறப்பட்டன.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரம்பலூா் மாவட்டத்தில் வட்டாட்சியா் அலுவலகங்களில் குறைதீா் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பெரம்பலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் 19, வேப்பந்தட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் 2, குன்னம் வட்டாட்சியா் அலுவலகத்தில் 6, ஆலத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் 1, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் 69 என மொத்தம் 97 மனுக்கள் பெறப்பட்டன.

முதியோா் உதவித்தொகை, விதவை, ஆதரவற்றோா், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக்கடன், இலவச தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெறப்பட்ட மனுக்களுக்கு ஒப்புதல் ரசீது வழங்கப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, மனுதாரா்களுக்கு 15 நாள்களுக்குள் பதிலளிக்க சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாவட்ட நிா்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT