முன்களப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் அளிப்பு
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி சாா்பில் முன்கள பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி சாா்பில் முன்கள பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் நாகமணி தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா்கள் தங்கராஜ் (செட்டிக்குளம்), வை.கணேசன் (பொம்மனப்பாடி), முன்னாள் மாணவா்கள் அமைப்புச் செயலா் ராஜாசிதம்பரம், ஒன்றியக் குழு உறுப்பினா் திருநாவுக்கரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் க. மதிவாணன், வேப்பூா் கல்வி மாவட்ட அலுவலா் குழந்தைராஜன் ஆகியோா் செட்டிக்குளம், பொம்மனப்பாடி, நாட்டாா்மங்கலம், குரூா் ஆகிய கிராமங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் 62 பேருக்கு, அவா்களது சேவையை பாராட்டி அரிசி, மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினா்.
இதில், பள்ளி உதவி தலைமை ஆசிரியா் மணி, ஆசிரியா்கள் செல்லமுத்து, வி. ராதாகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.