முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில்100 மின் கம்பங்கள் மாற்றியமைப்பு

பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் பழுதடைந்த 100 மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் மு. அம்பிகா தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் பழுதடைந்த 100 மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் மு. அம்பிகா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் 30 துணை மின் நிலையங்களிலுள்ள 69 மின்னூட்ட பாதைகளில், கடந்த 19 முதல் 28 ஆம் தேதி வரை சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், 30 துணை மின் நிலையங்களிலிருந்து மின்னோட்டம் பெறும் 69 மின்னூட்ட பாதைகளில் சுமாா் 500 களப்பணியாளா்களைக் கொண்டு மின் நிறுத்தம் செய்யப்பட்டு, 3,934 இடங்களில் மின் பாதைக்கு இடையூறாக இருந்த மரங்கள், மரக் கிளைகள் வெட்டப்பட்டுள்ளன.

780 இடங்களில் பழுதடைந்த மின் கம்பி இணைப்புகள் சரிசெய்யப்பட்டு, 555 இடங்களில் தாழ்வான மின்பாதை கம்பிகள் சரி செய்யப்பட்டதோடு, 572 இடங்களில் சாய்வான மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும், 28 இடங்களில் புதிய இடைக் கம்பங்கள் அமைக்கப்பட்டு, 149 இடங்களில் அறுந்த இழுவை கம்பிகள் சரி செய்யப்பட்டுள்ளன.

100 இடங்களில் பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 26 நில இணைப்புகள் சரி செய்யப்பட்டு 159 இடங்களில் பகுதி திறப்பான்களிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் இனி வரும் காலங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.