முகப்பு
பெரம்பலூர்

விதிமீறல்: 9 வாகனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

பெரம்பலூா் மாவட்டத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய வாகன வரியைச் செலுத்தாமல் இயக்கப்பட்டு வந்த 6 ஜேசிபி உள்பட 9 வாகனங்களுக்கு வெள்ளிக்கிழமை ரூ. 4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய வாகன வரியைச் செலுத்தாமல் இயக்கப்பட்டு வந்த 6 ஜேசிபி உள்பட 9 வாகனங்களுக்கு வெள்ளிக்கிழமை ரூ. 4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மாவட்டத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய வாகன வரியைச் செலுத்தாமல் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படியில், பெரம்பலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் க. பழனிசாமி, மோட்டாா் வாகன ஆய்வாளா் அ. செல்வக்குமாா் ஆகியோா், பெரம்பலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு, சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, 6 ஜேசிபி வாகனங்கள் வாகன வரியைச் செலுத்தாமல் இயக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 6 வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 2.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது. மேலும், அதிக பாரம் ஏற்றிச்சென்ற 3 கனரக வாகனங்களுக்கு ரூ. 1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.