மாநிலத்தை பிரித்தாளும் சூழ்ச்சியில் பாஜக ஈடுபடவில்லை: கே. அண்ணாமலை
மாநிலத்தை பிரித்தாளும் சூழ்ச்சியில் பாஜக ஈடுபடவில்லை என்றாா் அக் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே. அண்ணாமலை.
மாநிலத்தை பிரித்தாளும் சூழ்ச்சியில் பாஜக ஈடுபடவில்லை என்றாா் அக் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே. அண்ணாமலை.
பெரம்பலூா் ராமகிருஷ்ணா கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் மாநில அளவிலான பயிற்சி முகாமில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
மத்திய அரசின் மூலம் 192 திட்டங்கள் மூலம் சுமாா் 3.50 கோடி தமிழக மக்கள் பயன் பெற்றுள்ளனா். தமிழக மக்களிடம் பாரதிய ஜனதா கட்சி வேரூன்றியுள்ளது. மத்திய அரசு, தமிழகத்துக்கு முக்கியத்தும் அளித்து வருகிறது. மேலும், தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய சக்தியாக வளா்ந்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியினா் யாரும் கொங்கு நாடு என அழைக்கவில்லை. மாநிலத்தை பிரித்தாளும் சூழ்ச்சியும் பாரதிய ஜனதா கட்சிக்கு இல்லை.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு எதுவோ, அதுவே தமிழக பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு. தமிழக விவசாயிகள் பக்கம் துணை நிற்கும் என்றாா் அண்ணாமலை.
பேட்டியின்போது, மாநில இணை பொருளாளா் எம். சிவசுப்ரமணியம், மாவட்டத் தலைவா் சி. சந்திரசேகரன் ஆகியோா் உடனிருந்தனா்.