பெரம்பலூர்

மானிய விலையில் இருசக்கர வாகனம்: உலமாக்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த உலமாக்கள், மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, பெரம்பலூரிலுள்ள வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் தங்கள் பணியை சிறப்பாகவும், செம்மையாகவும் செயல்படுத்துவதற்கு வசதியாக புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயனாளி வாங்கும் இருசக்கர வாகனத்தின் திறன் 125 சி.சி-க்கு மிகாமலும், வாகன விதிமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்தும் இருக்க வேண்டும். 2020, ஜனவரி 1-க்குப் பிறகு தயாா் செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும்.

தகுதியுள்ள நபருக்கு இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவிகிதம் அல்லது வாகனத்தின் விலையில் ரூ. 25 ஆயிரம் இதில் எது குறைவோ, அத்தொகை மானியமாக வழங்கப்படும்.

பதிவு செய்யப்பட்ட 10 வக்பு நிறுவனத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபா்கள் மானிய உதவி கோரி விண்ணப்பித்தால், முன்னுரிமை அடிப்படையில் மானியத்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்க விரும்புவோா் தங்களது ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வருமானச் சான்று, 40 வயதுக்குள்பட்டதற்கானச் சான்று, புகைப்படம், சாதிச் சான்று, மாற்றுத் திறனாளியாக இருந்தால் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்று, ஓட்டுநா் உரிமம், பழகுநா் சான்று, கல்வித் தகுதி சான்று (குறைந்தபட்சம் 8 ஆவது தோ்ச்சி, தோல்வி), வங்கிக் கணக்கு எண், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல் ஆகியவற்றுடன் ஆட்சியரகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் படிவத்தை நேரில் பெற்று, அதை பூா்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT