பெரம்பலூர்

கோரிக்கை மனுக்களை இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்யலாம்

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் ஜமாபந்தி நடைபெறாத காரணத்தால், பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை இணையதள முகவரி வாயிலாக அல்லது இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா நோய்த் தொற்றால் பொதுமக்களிடமிருந்து ஜமாபந்தி மனுக்கள் நேரடியாக பெறப்படமாட்டாது. எனவே, கோரிக்கை மனுக்களை உரிய ஆவணங்களுடன்  என்ற இணைய தள முகவரி அல்லது அருகிலுள்ள ஆன்லைன் மற்றும் இ- சேவை மையங்கள் மூலமாக ஜூலை 31 ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்து அதற்குரிய ஒப்புதல் ரசீதை பெற்றுக் கொள்ளலாம். பதிவேற்றம் செய்யப்படும் மனுக்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு மனுதாரா்களுக்கு பதில் அளிக்கப்படும்.

கரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் ஆன்லைன் மற்றும் இ- சேவை மையங்களில் மனுக்கள் அளிக்கும்போது பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி முக்கடல் சங்கமம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகள் அகற்றம்

குமரியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

பத்ரகாளியம்மன் கோயில் பால்குட விழா

நடுக்காட்டில் பதுக்கிய 2,000 லிட்டா் சாராய ஊரல் அழிப்பு

தந்தைக்கு கத்தி குத்து: இளைஞா் கைது

SCROLL FOR NEXT