பெரம்பலூர்

முதியவா் கொலை வழக்கில் இளைஞா் கைது

நிலத்தை எழுதி வைக்க மறுத்த முதியவரை மதுபாட்டிலால் குத்திக் கொலை செய்த இளைஞரை, பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா்.

DIN

பெரம்பலூா்: நிலத்தை எழுதி வைக்க மறுத்த முதியவரை மதுபாட்டிலால் குத்திக் கொலை செய்த இளைஞரை, பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள கோனேரிபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் காா்த்திக் (35). இவருக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த பழனிமுத்து மகள் ரம்யாவுக்கும் (30), கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகளில் காா்த்திக் மனநலன் பாதிக்கப்பட்டதால், ரம்யா தனது பெற்றோா் வீட்டில் வசித்து வருகிறாா். இந்நிலையில், கருப்பையா அவருக்குச் சொந்தமான நிலத்தை விற்க ஏற்பாடு செய்துள்ளாா். இதையறிந்த ரம்யாவின் அண்ணன் பெரியசாமி (32) தனது தங்கை ரம்யாவுக்கு அந்த நிலத்தை எழுதி வைக்குமாறு, கருப்பையாவை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து கேட்டுள்ளாா். இதற்கு கருப்பையா மறுப்பு தெரிவித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த பெரியசாமி, கருப்பையாவை தான் மறைத்து வைத்திருந்த மதுபாட்டிலால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், பெரியசாமியை கைது செய்த பெரம்பலூா் போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி அரியலுாா் கிளைச் சிறையில் திங்கள்கிழமை அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT