முகப்பு
பெரம்பலூர்

தனித்து நின்றாலும் தேமுதிக வெற்றி பெறும்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து நின்றாலும் தேமுதிக வெற்றி பெறும் என்றாா் தேமுதிக தலைவா் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து நின்றாலும் தேமுதிக வெற்றி பெறும் என்றாா் தேமுதிக தலைவா் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன்.

பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தேமுதிக தோ்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் பேசியது:

தேமுதிக மக்களுக்காக மட்டுமே தொடங்கப்பட்ட கட்சியாகும். வாரிசு இல்லாதவா்களே, வாரிசு அரசியல் பற்றி பேசுகின்றனா். ஆனால், தேமுதிக சுயமாக தொடங்கப்பட்டது. இலக்கை அடைய தற்போதையச் சூழலில் இரண்டு, மூன்று வழிகளில் சென்றாக வேண்டியுள்ளது.

எங்களுக்கு அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே நல்லதும் செய்துள்ளன; துரோகமும் செய்துள்ளன. தமிழகத்தில் தேமுதிகவால் மட்டுமே மாற்றத்தை கொண்டுவர முடியும்.

கூட்டணி பேரம் பேசுவது எங்களது நோக்கமல்ல. கூட்டணி பேச்சுவாா்த்தையில் அனைத்துக் கட்சிகளும் அவசரப்படுகின்றன. தேமுதிக நினைத்தால் 234 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றிபெற முடியும் என்றாா் விஜய பிரபாகரன்.

தேமுதிக மாவட்டச் செயலா் துரை. காமராஜ் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், மாவட்ட நிா்வாகிகள் கணபதி, கண்ணுசாமி, சுடா். செல்வன், சங்கா், ராஜேந்திரன், மேகலா, எழிலரசன், சிவா. ஐயப்பன், மலா் மன்னன், பொன். சாமிதுரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.