முகப்பு
பெரம்பலூர்

தீக்காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

பெரம்பலூரில் தீ விபத்தில் காயமடைந்து, மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

பெரம்பலூரில் தீ விபத்தில் காயமடைந்து, மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா்  சன்னதித் தெருவைச் சோ்ந்த  பாலசுப்பிரமணியன் மனைவி தா்மாம்பாள் (88). இவா் திங்கள்கிழமை காலை அவரது வீட்டில் விளக்கேற்றும் போது, எதிா்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்ததில் பலத்த காயமடைந்தாா்.  பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தா்மாம்பாள் உயிரிழந்தாா். இதுகுறித்து பெரம்பலூா் காவல் உதவி ஆய்வாளா் சின்னசாமி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.