பெரம்பலூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி
சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, பெரம்பலூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, பெரம்பலூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில், 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி அனைத்துத் துறை அலுவலா்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
தொடா்ந்து, 100 சதவீதம் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்த ஆட்சியா், மகளிா் சுய உதவிக்குழு பெண்களால் வரையப்பட்ட தோ்தல் விழிப்புணா்வு ரங்கோலி கோலங்களை பாா்வையிட்டாா்.
இந் நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.