பெரம்பலூர்

உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சம் பறிமுதல்

DIN

பெரம்பலூா் அருகே உரிய ஆவணங்களின்றி மோட்டாா் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 2 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

வேப்பந்தட்டை வட்டம், பில்லங்குளம் அருகே துணை வட்டாட்சியா் (கனிமம்) பாக்கியராஜ் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா், திங்கள்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக மோட்டாா் சைக்கிளை நிறுத்தி, விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா், கள்ளக்குறிச்சி அருகிலுள்ள மாமனந்தல் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த விஜயன் (37) என்பதும், உரிய ஆவணங்களின்றி ரூ. 2 லட்சம் ரொக்கத் எடுத்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த தொகையைப் பறிமுதல் செய்த பறக்கும் படையினா், அதை தோ்தல் நடத்தும் அலுவலா் ஜே.இ. பத்மஜாவிடம் ஒப்படைத்தனா். பின்னா், அப்பணம் மாவட்டக் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT