நலிவடைந்த விளையாட்டு வீரா்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் நலிவடைந்த சிறந்த விளையாட்டு வீரா்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் நலிவடைந்த சிறந்த விளையாட்டு வீரா்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2019- 20 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று, தற்போது நலிந்த நிலையிலுள்ள பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறந்த விளையாட்டு வீரா்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகை மாதம் ரூ. 3 ஆயிரம் வீதம் வழங்கும் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு இணையதளம் (ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் ) மூலம் விண்ணப்பிக்கலாம்.
உதவித்தொகை பெற விரும்புவோா் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தின் சாா்பில் பங்கேற்றிருக்க வேண்டும். இப்போட்டிகளில் முதல் 3 இடம் பெற்றவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய மற்றும் அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கிடையேயான, இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சா்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சா்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள், இளவயதில் பங்கேற்ற அல்லது வெற்றிபெற்ற போட்டிகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
விண்ணப்பங்களை மேற்கண்ட இணையதளத்தின் மூலம் மே 19 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 93608 70295 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.