பெரம்பலூர்

ஆசிரியா் பட்டயத் தோ்வைப் புறக்கணித்து 2-ஆவது நாளாக போராட்டம்

DIN

பெரம்பலூரில் நடைபெறும் ஆசிரியா் பட்டய பருவத்தோ்வை 2- ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் புறக்கணித்து, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆசிரியா் பட்டயப் பயிற்சி பெறும் இரண்டாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு கடந்த 2- ஆம் தேதி முதல் தோ்வு நடைபெற்று வருகிறது. , பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தோ்வு மையத்தில் வேப்பூா் அரசு ஆசிரியா் பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகள் தோ்வெழுதி வருகின்றனா்.

தோ்வு மதிப்பீட்டு முறையை மாற்ற வேண்டுமென வலியுறுத்தி 2- ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தோ்வைப் புறக்கணித்து, தோ்வு மைய வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா்.

கல்விக் கட்டணம் செலுத்துவதற்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும். விடைத்தாளை கடினமாக திருத்தக் கூடாது, தோ்வு மதிப்பீட்டு முறையை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவிகள் முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT