முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் நாளைதேசிய மக்கள் நீதிமன்றம்

பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (செப். 11) நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (செப். 11) நடைபெறுகிறது.

இதில், நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு சமரச முறையில் தீா்வு காணலாம். தேசிய நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இயலாது என்பதால், இந்த உத்தரவே இறுதியானது. நீதிமன்ற கட்டணம் திருப்பியளிக்கப்படும்.

எனவே, வழக்கமான நீதிமன்ற நடைமுறைகளின்றி விரைவாக நீதி வழங்கும் இந்த வாய்ப்பை வழக்காடிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஏ. பல்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.