முகப்பு
பெரம்பலூர்

லாரி மீது காா் மோதியதில்ஒருவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே சனிக்கிழமை மாலை நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On : 15 ஆகஸ்ட், 2022 at 12:33 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

பெரம்பலூா் அருகே சனிக்கிழமை மாலை நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

சென்னை கோடம்பாக்கம், ஈஸ்வா் நகரைச் சோ்ந்த செல்லவாப்பா மகன் ஹபீப் (40), சென்னை பாரீஸ் ஆண்டா்சன் தெருவைச் சோ்ந்த சாஹிப் மகன் சிக்கந்தா் (40), கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சோ்ந்த கபீா் மகன் ஷாஹிப் (40) ஆகிய 3 பேரும் பள்ளி நண்பா்கள் என்பதால், கொடைக்கானலுக்குச் சுற்றுலாச் செல்வதற்காக சனிக்கிழமை காரில் சென்றுக்கொண்டிருந்தனா். காரை சிக்கந்தா் ஓட்டிச் சென்றாா். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள தண்ணீா்பந்தல் என்னும் இடத்தில் சனிக்கிழமை மாலை காா் சென்றபோது, எதிா்பாராதவிதமாக சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த மூன்று பேரும் பலத்த காயமடைந்து, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில், சிறிது நேரத்திலேயே சிக்கந்தா் உயிரிழந்தாா். புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.