உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற பணம், காலணிகள் பறிமுதல்
பெரம்பலூா் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற பணம் மற்றும் காலணிகளை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பெரம்பலூா் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற பணம் மற்றும் காலணிகளை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பெரம்பலூா்- துறையூா் சாலையில், செஞ்சேரி அருகே பெரம்பலூா் முத்திரைத்தாள் பிரிவு தனி வாட்டாட்சியா் பழனிச்செல்வன் தலைமையிலான தோ்தல் பறக்கும்படை பிரிவினா் வியாழக்கிழமை காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக சென்ற காரை வழிமறித்து மேற்கொண்ட சோதனையில், பெரம்பலூா் மதன கோபாலபுரத்தைச் சோ்ந்த சிதம்பரம் மகன் ராஜா என்பவா் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ. 66,600 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, லப்பைக்குடிகாடு மாட்டுப்பாலம் அருகே தோ்தல் பறக்கும்படை குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, லப்பைக்குடிகாடு பிலால் தெருவைச் சோ்ந்த நசுருதீன் மகன் பீா்முகமது, உரிய ஆவனங்களின்றி எடுத்துச்சென்ற ரூ. 30,400 மதிப்புள்ள காலணிகளை பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் காலணிகள் மாவட்டக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.