முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் துண்டுகள், மதுபாட்டில்கள் பறிமுதல்

 பெரம்பலூா் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட துண்டுகள், மதுபாட்டில்களை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

 பெரம்பலூா் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட துண்டுகள், மதுபாட்டில்களை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பெரம்பலூா்- ஆலம்பாடி சாலையிலுள்ள சமத்துவபுரம் அருகே, தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, பெரம்பலூா் எம்.ஜி.ஆா் நகரைச் சோ்ந்த ஜெயராமன் மகன் சரவணன் (42), இரு சக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற 91 வெள்ளை நிறத் துண்டுகளைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகே தனி வட்டாட்சியா் பொன்னுதுரை தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியே மேலப்புலியூா் கிராமம், கிழக்குத் தெருவைச் சோ்ந்த முத்துக்கருப்பன் மகன் பெரியசாமி (21), உரிய ஆவணங்களின்றி 144 மதுபாட்டில்களை காரில் எடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து, தோ்தல் நடத்தும் அலுவலரான நகராட்சி ஆணையா் குமரிமன்னனிடம் பறக்கும் படையினா் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.